--- --:--:-- --

தமிழகத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடா?

5

கொரொனா தடுப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக பார்க்கக்கூடிய ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா? ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரை மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு மருந்தாக பயன்படுகிறது. உலகில் தயாரிக்கப்படும் மொத்த ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் 70% இந்தியாவில் உற்பத்தியாகிறது.

 

நான்கு பெரும் நிறுவனங்கள் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கின்றன. 200mg, 400mg என இரண்டு அளவுகளில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 500 அட்டைகள் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் விற்பனையாகும் என்று கூறுகின்றனர் மருந்து விற்பனையாளர்கள்.

 

இந்நிலையில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியானது குறித்து சென்னையில் உள்ள மருந்து கடைகளில் விசாரித்தபோது கடந்த சில நாட்களாக ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரை கிடைக்கவில்லை என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.

 

இதற்கிடையே ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏதுமில்லை என்று தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் செயலாளர் கேகே செல்வன் தெரிவித்துள்ளார். மருத்துவரின் பரிந்துரைப்படி ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரையை உட்கொண்டால் வேறு சில பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon