--- --:--:-- --

ஒரு மாதத்திற்கு தினசரி 5000 பேருக்கு உணவளிக்க சச்சின் உறுதி..!

4

கொரொனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி கூறியுள்ளார்.

 

அப்னாலயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. தங்கள் அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவுச் செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன்வந்துள்ளார் என்ற தகவலை உறுதி செய்துள்ளது.

 

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் அப்னாலயா அமைப்புகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்களின் சேவையை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon