பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்குமா..?
தேர்வுகள் முடிந்ததும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமா என ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளரிடம் பேசிய அன்பில் மகேஷ் மே 28 வரை தேர்வுகள் நடைபெறுவதாகவும் தேர்வு தேதி முடிந்த பின்னர் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்பதால் கோடை விடுமுறை குறித்து ஆய்வு செய்த பிறகு அறிவிக்கப்படும் என்றார்.
2ஆண்டுகள் கொரொனா காலத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






