என்ன நடந்தது என்று தெரியவில்லை ஏமாற்றிவிட்டனர்..?
தன்னால் 40 வயது வரை விளையாட முடியும் என்று இந்திய குத்துச்சண்டை வீரர் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு பறிபோனது.
இந்த நிலையில் நாடு திரும்பிய மேரிகோம் ஓய்வு பெறுவீர்களா அல்லது தொடர்ந்து விளையாடுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இன்னமும் வயது இருக்கிறது 40 வயது வரை விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
தோல்வி குறித்து கூறும்போது தான் போட்டியில் இறங்குவதற்கு முன்னர் நடுவர் என்று அரிசியை மாற்றக் கோரினார். இதற்கு முன்னர் எவரும் ஜெர்சி குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
இதன் காரணமாக நான் மனரீதியாக சற்று பலவீனமடைந்ததாகவும், என்ன நடந்தது என்று தெரியவில்லை ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து புகார் அளிக்க உள்ளேன் என்றார்.







