டிஎன்பிஎஸ்சி- குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு..!
7301 இடங்களுக்கு ஜூலை 24-ஆம் தேதி குரூப் 4 போட்டி தேர்வு என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரொனா வந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப்-4 தேர்வு நடைபெறவில்லை.
2019ஆம் ஆண்டு தான் கடைசியாக நடந்தது. அதற்குப் பிறகு தற்பொழுது தான் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி குரூப்-4 தேர்வை பொருத்தவரை வழக்கமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளை இந்த ஒருங்கிணைந்தது.






