திமுக ஊராட்சி மன்ற தலைவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை..!
சென்னை அடுத்த திருநின்றவூர் பகுதியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொசவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் வழக்கறிஞருமான திமுகவை சேர்ந்த பரமகுரு, மாலைக்கொட்டாம்பேடு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட வந்துள்ளார்.
அப்போது அங்கு 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பரமகுரு உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






