பரப்புரைக்கு சென்றவர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரைக்கு சென்றவர்களுக்கு திமுகவினர் பணம் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. வரும் ஐந்தாம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை சூடு பிடித்துள்ளது.
அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்களில் திமுக பரப்புரையில் கலந்து கொண்டவர்களுக்கு இருநூறு ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் இத்தகைய செயலை பறக்கும் படை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என மற்ற வேட்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





