--- --:--:-- --

திமுக கூட்டணி கட்சியினர் நாளை நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

6

திமுக கூட்டணி கட்சியினர் நாளை நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திமுக கூட்டணி கட்சியினர் நாளை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

 

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

 

ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர். கொரொனா தொற்று காரணமாக சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon