பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்து தண்டனை..!
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான் கான் அவசர சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் வழங்கினார்.
இந்த அவசர சட்டத்தின் மூலம் பாலியல் குற்றத்தில் தண்டனை பெறுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய மருத்துவ குழுவால் மருந்து தரப்படும். மேலும் குற்றவாளிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.







