கல்லூரி கேன்டீனில் மாணவர்கள் இடையே தகராறு..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் கல்லூரி உணவகத்தில் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறி மாணவர்கள் இரு குழுவினராக பிரிந்து ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொண்டனர்.
மாணவர்கள் கூட்டம் கூட்டமாக மோதிய சண்டை வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





