--- --:--:-- --

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை பைலட்.!

8

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி இந்திய விமானப் படையின் முன்னாள் விங் கமாண்டர் என்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் கோழிக்கோடு விமான விபத்தில் முதன்மை விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்துள்ளனர்.

 

இதில் முதன்மை விமானி தீபக் வசந்த் சாதே இந்திய விமானப் படையின் முன்னாள் விங் காமண்டர் என்பது தெரியவந்துள்ளது. 1981 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் இணைந்து தேச பணியாற்றிய வசந்த் சாதே திறமை வாய்ந்த போர் விமானியாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது.

 

இதற்காக சோராப் ஹானர் விருதை அவர் பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றதும், ஹேர் பஸ்ட் விமானியாக சிலகாலம் பணியாற்றினார். கடைசியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் ரக விமானத்தின் விமானி ஆக சேர்ந்தார்.

Leave a Reply

Right Menu Icon