--- --:--:-- --

திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை..!

1

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

 

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 

இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பில் வரும் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதேபோன்று மலை ஏறுவதற்கும் கிரிவலம் செல்வதற்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாடவீதிகளில் நடைபெறும் சுவாமி வீதி உலா, தேர் திருவிழா இந்த ஆண்டும் நடைபெறாது என தெரிவித்துள்ள ஆட்சியர் அதற்கு மாற்றாக ஐந்தாம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என கூறியுள்ளார்.

Right Menu Icon