தேவர் ஜெயந்தி விழா – மதுரையில் போக்குவரத்து மாற்றம்
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி- மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






