--- --:--:-- --

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

3

க்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது.அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.3000 குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

நேற்று (அக்டோபர் 28) மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,075க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர் இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

 

அதன் படி இன்று (அக்டோபர் 29) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,350க்கும் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.166க்கும், ஒரு கிலோ ரூ.1,66,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon