ரயில்வே பெட்டி மீது ஏறிய மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!
சென்னை வண்ணாரப்பேட்டையில் விளையாட்டுத்தனமாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வஉசி ரயில்வே பாதையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அப்துல் என்ற மாணவன் காற்றாடியை பிடிப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறினான். அப்பொழுது மேலே சென்று உயர்மின் அழுத்தக் கம்பி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவன் உயிரிழந்தான். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







