ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!
வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தென் தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த சூழலில் புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






