--- --:--:-- --

மருத்துவப்படிப்பிற்கான இடங்களை அதிகரிக்க கோரிக்கை..!

11

மிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை இந்தாண்டு ஒதுக்கி காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழி செய்ய வேண்டும் எனும் உயர் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு 51 மாணவர்கள் மருத்துவப் படிப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

அந்த கட்சி சார்பில் இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கான எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் இதன் மூலம் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகள் நனவாகும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon