--- --:--:-- --

லில்விங்க் டுகெதராக இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுக்கும் இளைஞர்..!

12

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து விட்டு காதலியை திருமணம் செய்ய மறுத்த நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

 

ஸ்ரீராமின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்துக்கொள்ள தன் காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார். இரண்டு மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில்தான் அந்த பெண்ணும் தங்கியிருந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீராமின் தாயாருக்கு அந்த பெண் பேருதவியாக இருந்து வந்துள்ளார்.

 

இந்த சமயத்தில் நாம் தான் திருமணம் செய்து கொள்ள போகிறோமே பின்னர் என்ன என்று கூறி திருமண ஆசைகாட்டி இளம்பெண் இடத்தில் ஸ்ரீராம் எல்லைதாண்டி உள்ளார். தாலி கட்டாமலேயே இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

 

ஒரு கட்டத்தில் ஸ்ரீராமுக்கு காதலி போரடித்து போனதாக தெரிகிறது. ஸ்ரீராமின் ஆசை சரியாக 60 நாட்களில் தீர்ந்து போனது. இதனால் ஸ்ரீராம் தன் காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்தியும் ஸ்ரீராம் மாறவில்லை.

 

இதனால் கடும் வேதனை அடைந்த அந்த இளம்பெண் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அவர் மீது பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon