கிறிஸ்துமா தாத்தா வேடமிட்டு கடத்தல் காரர்களை கைது செய்த அதிகாரிகள்..!
பெரு நாட்டில் கிறிஸ்துமா தாத்தா போல் வேடமிட்டு போதை மருந்து கடத்தல் காரர்களை இரண்டு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
லீமாவில் உள்ள வீட்டை ரகசிய தகவலின் பேரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட இரண்டு போதை மருந்து கடத்தல் தடுப்புப் படை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பின்னர் கடத்தல் கும்பல் தலைவன் லூயி, தொழில் கூட்டாளிகள் 4 பேர் இருப்பதை உறுதி செய்து கொண்டு சுத்தியலுடன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைது செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.







