--- --:--:-- --

தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என கோரிக்கை..!

6

கிராமங்களில் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.

 

சட்டப்பேரவையில் பேசிய அவர் அரசின் அனைத்து வேளாண் திட்டங்களிலும் நிலமற்ற கூலி விவசாயிகளின் நலன்களை முன்னிறுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறியவர் கலாச்சார தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் கிராமங்களில் சாதி தலைவர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon