ரயில் பெட்டியில் இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பால் பயணிகள் ஓட்டம்..!
ரயில் பெட்டியில் கொம்பேரி மூக்கன் பாம்பு ஏறியதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு நடைமேடையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
ஒவ்வொருவராக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறிக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு பெட்டியில் பயணிகள் ஏறியபோது இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து பாம்பு பிடிப்பவர் கொம்பரி மூக்கனை பிடித்து சென்றனர். இதனால்தான் அங்கு பதற்றம் தணிய பட்டது.







