அதிக வீரியத்துடன் பரவும் டெல்டா வகை கொரொனா..!
தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலை பரவலுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என பொது சுகாதார இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டாக தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு 1,159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் டெல்டா வகை வைரஸால் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக வீரியத்துடன் வரும் என்பதால் பலர் கொத்துக்கொத்தாக பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.







