சீன ஹேக்கர்கள் செயலால் ஸ்தம்பித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள்..!
டெல்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை திகழ்கிறது.
இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி முதல் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை ஒருங்கிணைக்கும் சர்வர் செயல் இழந்தது. இதனால் வெளி நோயாளிகள் பிரிவு, ரத்த மாதிரிகள் பணி, கணினி தொடர்பான பணிகள் சந்தித்தனர்.
இது தொடர்பாக உடனடியாக தேசிய தகவல் மையத்திற்கு தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமான ஆய்வுகள் முயற்சிகளுக்கு பின் 100 சர்வர்கள் பத்திரமாக மீட்கப்பட்டன என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த சைபர் தாக்குதல் சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றும், அங்கிருந்து ஹேக்கர்கள் சர்வர்களை ஊடுருவியுள்ளனர் எனவும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






