--- --:--:-- --

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!

10

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி அரசு அலுவலர்களுக்கும் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரம் ரூபாய் வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நிதித்துறை செயலாளர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon