--- --:--:-- --

தாராவியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

7.1

கொரோனா மையமாக கருதப்பட்ட மும்பை தாராவியில் கடந்த ஏழு நாட்களாக ஒரு உயிரிழப்பு நேராதது பெரும் ஆதரவு அளிக்கும் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதிக மக்கள் நெருக்கம் உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது. இது பெரும் அச்சத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது.

 

இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ஜூன் 1-ஆம் தேதி புதிதாக 34 பேருக்கு கொரொனா கண்டறியப்பட்ட நிலையில் தினந்தோறும் தொற்று எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு ஜூன் 7-ஆம் தேதி 13 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

912 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அங்கு கடந்த ஏழு நாட்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மிகத் தீவிரமான பரிசோதனை மற்றும் நோய்க்கட்டுப்பாடு நடவடிக்கைகளால் தொற்று குறைந்து வருவதாக கூறியிருக்கும் தாராவி சிறப்பு அதிகாரி சுமார் 7 லட்சம் பேருக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கிறார்.

 

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட வருவதும் பலன் அளிப்பதாக அவர் கூறியிருக்கிறார். சுமார் எட்டரை லட்சம் மக்கள் தொகை கொண்ட தாராவியில் 8,500 பேர் அரசின் தனிமைப்படுத்தல் மையங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon