2021 ஐபிஎல் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார் அஸ்வின்.!
2021 ஐபிஎல் டி20 தொடரில் இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவும் போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சூழல் நல்லபடியாக மாறினால் தான் மீண்டும் அணிக்குள் வருவேன் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நாளைமுதல் விடைபெற்றுக் கொள்கிறேன் எனவும், கொரொனா வைரசுக்கு எதிரான தன்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தும் சரியான திசையில் சென்றால் தான் அணியில் சேர்வேன் எனக்கூறிய அவர் இந்த கடினமான தருணத்தில் அஸ்வினுக்கு ஆதரவளிப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகமும் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.






