காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்..!
ஈரோடு மாவட்டத்தில் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தந்த உறவினரின் வாகனத்தை பெண்ணின் தரப்பினர் தீயிட்டு எரித்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரும் அதே பகுதியை சேர்ந்த தர்சனாவும் காதலித்து வந்துள்ளனர்.
பிரபு ஏற்கனவே திருமணமானவர் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி தர்சனாவை காணவில்லை. இதுபற்றி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடைய தர்சனாவை திருமணம் செய்து கொண்டு வேலூரில் உள்ள தனது உறவினர் ஜெயக்குமாரின் வீட்டில் தங்க வைத்துள்ளதாக பெண் வீட்டார் அறிந்துள்ளனர். அதன்படி அங்கு சென்ற தர்சனாவின் பெற்றோரும், சா என்கிற உறவினரும் தங்கள் பெண்ணை திருப்பி அனுப்புமாறு வாக்குவாதம் செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜெயக்குமார் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேனை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இது குறித்து ஜெயக்குமார் பங்களாபுதூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.




