சென்னை ஆவடியில் கோழியால் ஏற்பட்ட தகராறில் உயிரிழப்பு..!
சென்னை ஆவடி அருகே கோழி தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த பகுதியில் சசிக்குமார் என்பவர் தனது வீட்டில் கோழி வளர்த்து வந்துள்ளார்.
இவரது கோழி அருகில் வசிக்கும் அன்பழகனின் வீட்டிற்கு சென்றும் இருப்பதால் இருவருக்குமிடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோழி தங்களது வீட்டிற்கு சென்றதால் அதனை அன்பழகனின் மனைவி கண்டித்துள்ளார். இதனை தட்டி கேட்டபோது அன்பழகன் சசிகுமாரும் இடையே தகராறு முற்றிய மோதலாக மாறியது.
அப்போது சசிகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அன்பழகனை கைது செய்த காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.






