--- --:--:-- --

ஆகஸ்ட் மாதத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு பூமி பூஜை!

4.1

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமிபூஜை அடுத்த மாதம் 3 அல்லது 5 ஆம் தேதி நடக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கோவில் கட்டும் பணியை மேற்கொள்ளும் ராம ஜென்மபூமி தீர்த்த டிரஸ்ட் அமைப்பின் பொது செயலாளர் காமேஸ்வர் சௌகள் இந்த தகவலை தெரிவித்தார்.

 

கோவில் கட்டுமான பணியை தொடங்கும் முன்பு பூமி பூஜை செய்வதற்கான இரு தேதிகளை பிரதமருக்கு அனுப்பி இருப்பதாகவும் அதில் ஒரு தேதியை அவரே தேர்வு செய்வார் என்றும் காமேஸ்வர் தெரிவித்தார். கோவில் கட்டுவதற்கான நிதி 4 லட்சம் பகுதிகளில் உள்ள 10 கோடி குடும்பங்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon