தேனியில் ஆட்டோ வீலிங்கில் ஆபத்தான முறையில் ஈடுபட்ட கும்பல்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கானா விளக்கு பகுதியில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஆட்டோ வீலிங்கில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து நிறைந்த சாலையில் ஆட்டோவின் முன்புறம் பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் என சுமார் 10 பேர் வரை நின்று கொண்டு முன்பக்க சக்கரத்தை தூக்கியவாறு சென்றுள்ளனர்.
சினிமா பாடல் பின்னணியில் அந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.







