கொரொனா தடுப்பூசியை விரைவாக போட்டுக் கொள்ளாவிட்டால் ஆபத்து..!
கொரொனா தடுப்பூசியை விரைவாக போட்டுக் கொள்ளா விட்டால் உயிர் பறிக்கும் வைரசாக மீண்டும் ஒரு மாறும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய காரணம் வேகமாக பரவி வருகிறது. கொரொனா தடுப்பூசி தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாறிய கொரொனாவுக்கு எதிராக குறைவான செயல் திறனையும் கொண்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல பிரேசிலில் பரவும் உருமாறிய கோரொனா ஏற்கனவே தொற்று ஏற்பட்டவர்களுக்கு பரவக்கூடிய தன்மை கொண்டது. சார்ஸ் வைரஸ் இன்னும் நம்மை விட்டு போகாத நிலையில் அதனுடன் நாம் வாழ பழகிக்கொள்ளகொண்டதை சுட்டிக் காட்டியிருக்கும் தடுப்பூசி ஆய்வாளர்கள் கொரோனாவும் தமது உருமாற்றங்களை தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உலகளவில் மூன்று வகையாக உருமாறி இருக்கும் கொரொனா மீண்டும் உயிர் கொல்லியாக உரு மாறாதது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ளா விட்டால் வைரஸ் ஆபத்தானதாக உருமாறும் கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.







