கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை வழக்கு!
கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை வழக்கு தொடர்பாக தாமரைசேரி நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் கூடதாயி கிராமத்தில் திருமணத்தை மீறிய காதலுக்கு தடையாக இருந்த கணவர், மாமனார், மாமியார், மாமனாரின் சகோதரர், காதலனின் மனைவி, குழந்தைகள் என ஆறு பேரை ஜூலி என்பவர் சயனைடு கலந்த உணவை கலந்து கொலை செய்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜூலியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜூலி தனது முதல் கணவரை கொலை செய்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் தாமரை செய்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
246 சாட்சியங்களின் வாக்குமூலங்கள், வழக்கு தொடர்பான 22 ஆவணங்கள், 322 ஆதாரங்களுடன் 1800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர் சயனைடு கொலை வழக்குகளில் குற்றப்பத்திரிகை இது என்பது குறிப்பிடத்தக்கது.






