காணும் பொங்கல் குமரியில் கூட்டம் நெரிசல்..!
காணும் பொங்கலை ஒட்டி குமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு காணும் பொங்கல் ஒட்டி மக்கள் படையெடுத்தனர்.
சூரிய உதயத்தை காண அதிகாலையிலேயே அதிக அளவில் மக்கள் வருகை தந்து கடற்கரையில் குளித்து மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் குடும்பத்தினருடன் அவர்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டு பொழுதை கழித்தனர்.






