--- --:--:-- --

தொடர் விடுமுறையால் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் மக்கள் கூட்டம்

13

தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வருகை அதிகரித்திருப்பதால் வேளாங்கண்ணி ஆர்ச்சு முதல் பேராலயம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

புத்தாண்டிற்கு பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேளாங்கண்ணி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon