நாயின் காலை துண்டாக்கிய முதலை..! காப்பாற்றிய இளைஞர்!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் முதலையின் பிடியில் சிக்கிய நாயை இளைஞர் ஒருவர் போராடி காப்பாற்றியுள்ளார். டிரண்ட் திவ்டெல் என்ற இளைஞர் தனது 6 வயது நாயுடன் பண்ணையில் நடைபயணம் மேற்கொண்ட போது நீரில் மறைந்திருந்த 13 அடி நீள முதலை ஒன்று திடீரென பாய்ந்து வந்து நாயை கவ்விப்பிடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டேவிட் அந்த முதலையிடமிருந்து நாயை காப்பாற்ற கடுமையாக போராடினார். இறுதியில் அந்த முதலை நாயை விட்டுவிட்டு நீருக்குள் புகுந்தது இந்த சம்பவத்தில் நாயின் முன் கால் துண்டானது அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டிரண்ட் திவ்டெல்லுக்கும் கைவிரல்களில் முதலை தாக்கியதால் காயம் ஏற்பட்டிருக்கிறது.






