சட்ட விரோதமாக குவாரி நடத்தும் நபர்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு
சட்ட விரோதமாக குவாரி நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அபராதம் விதிக்கப்பட்டு அபராதத் தொகை கட்டாதவர்கள் மீது வருவாய் மீட்புச் சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





