--- --:--:-- --

சக வீரரை தாக்கிய கிரிக்கெட் வீரருக்கு 3 ஆண்டுகள் தண்டனை!

5

சக வீரரை தாக்கிய குற்றத்திற்காக வங்கதேச வீரர் ஷகாதத் ஹுசைனுக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் சக வீரர் அராஃபத்தை ஷகாதத் தாக்கியிருக்கிறார்.

 

அவரின் இச்செயல் குறித்து போட்டி நடுவர் புகார் அளிக்க ஷகாதத்திற்கு மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை மிகவும், கடுமையாக இருப்பதாகவும் இதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையே முடிவு பெறலாம் என்றும் 33 வயதான ஷகாதத் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon