இந்தாண்டிற்கான கிரிக்கெட் வாரிய வாழ்நாள் சாதனையாளர் விருது! யாருக்கு தெரியுமா?
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் வீராங்கனை அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2019 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை அறிவித்துள்ளது.

அதன்படி முன்னாள் கேப்டனும் 1983ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றவருமான தமிழ் நாட்டு வீரர் ஸ்ரீகாந்திற்கும் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல முன்னாள் வீரர் அஞ்சும் சோப்ராவும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் வரும் ஜனவரி 12 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப் படுகின்றன.






