மதம் பிடித்த காட்டு யானையிடம் இருந்து தப்பித்த தம்பதி..!
மதம் பிடித்த காட்டு யானையிடம் இருந்து தம்பதி நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நீலகிரியில் நிகழ்ந்துள்ளது. கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பழங்குடி கிராமம் உள்ளது.
இங்கு காட்டு யானைகள் வராமல் தடுப்பதற்காக வெட்டப்பட்ட இன்னொரு பகுதி சேதமடைந்துள்ளது. அதன் வழியாக வந்த மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை எதிரே வந்த தம்பதியை விரட்டி உள்ளது. அவர்கள் தலைதெறிக்க ஓடி உயிரை காப்பாற்றிக்கொண்ட காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






