அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி சென்ற பெண்..!
கடலூரில் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட விசுர் கிராமத்தை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
உறவினர்களை பார்ப்பதற்காக அவரது மாமியார் வெளியே சென்றிருந்த நிலையில் அவர் குழந்தையை கேட்பதாக கூறி மருத்துவமனைக்குள் இவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான பெண் ஒருவர் குழந்தையை கடத்தி உள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது குழந்தையுடன் அந்த பெண் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.






