--- --:--:-- --

மகள் மீது உள்ள பாசத்தில் மகனை கோபித்து கொண்டு வெளியேறிய தம்பதி உயிரிழப்பு!

8

மகனுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தற்கொலைக்கு முயன்ற வயதான தம்பதி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மேலூர் அருகே சொக்கலிங்கபுரதிற்கு அருகில் வயதான தம்பதி சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதாக கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு செவ்வாய் அன்று தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 

ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த அவரது கணவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேர்ந்த 63 வயது பாண்டியராஜன் என்றும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது அவரது மனைவி கமலம் என்றும் தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 60 வயது கமலம் புதன் அன்று உயிரிழந்தார்.

 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் நெஞ்சை உருக்கும் விதத்தில் உள்ளன. உயிரிழந்த பாண்டியராஜன், கமலம் தம்பதி மகன் சதீஷ்குமார் உடன் பிள்ளையார்பட்டியில் வசித்து வந்துள்ளனர். கும்பகோணத்தில் வசிக்கும் அவர்களது மகளுக்கும் அவரது கணவருக்கும் பிரச்சினை என அறிந்து அங்கு செல்ல விரும்பியுள்ளனர் வயதான தம்பதி.

 

பொது முடக்கத்தை காரணம் காட்டி அவர் பெற்றோரின் கும்பகோணத்திற்கு அனுப்ப மறுத்துள்ளான். இதனால் மகனுடன் கோபித்துக்கொண்ட பாண்டியராஜனும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சைக்கிளிலேயே வந்த அவர்கள் கையை அறுத்துக் கொண்ட நிலையில் சாலையில் கிடந்து உள்ளனர்.

 

இதில் பாண்டியராஜன் அங்கேயே இறந்த நிலையில் மனைவி கமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து உள்ளார். வயதானதம்பதி அடுத்தடுத்த நாளில் உயிரிழந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon