2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்கக்கூடாது – மத்திய அரசு
குழந்தைகளுக்கு இருமல் சிரப் பரிந்துரைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்கக்கூடாது. பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி சிரப் பரிந்துரைக்கப்படுவதில்லை.
மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இருமல் சிரப் சாப்பிட்டதால் 9 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு இந்த அறிவுரைகளை வழங்கியுள்ளது





