--- --:--:-- --

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

13

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 206 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14 ஆயிரத்து 376 பேரிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தமிழகத்திலும் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon