--- --:--:-- --

கொரானா வைரஸை கண்டறிந்த டாக்டருக்கே கொரானா பாதிப்பு

13

கொரானா வைரஸ் பரவுவதை முதலில் கண்டறிந்த டாக்டருக்கு நோய் தாக்கியுள்ளது. சீனாவின் உகான் நகரை சேர்ந்த 34 வயது மருத்துவர் லிபெரியன் கடல் உணவுகளை விற்பனை செய்யும் உள்ளூர் மார்க்கெட்டை சேர்ந்த 7 பேர் புதிய வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த டிசம்பர் 30ம் தேதி செய்தி அனுப்பியுள்ளார்.

 

அவர் அனுப்பிய செய்தி ஆன் லைனில் வைரலாக பரவியதால் வதந்தி பரப்பியதாக அவர் மீது அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் கூறியது உண்மையானதுடன் கொரானாவின் கோரப் பிடியில் சீனா சிக்கியது.

 

கொரானா வைரஸ் பாதித்த நோயாளி என்று தெரியாமல் சிகிச்சை அளித்த போது அவருக்கும் கடந்த 10ஆம் தேதி கொரானா தோன்றியது. இந்த விவகாரம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அரசு கையாளும் கடுமையான தணிக்கை முறை கள் மீது சீனர்களுக்கு கோபத்தையும் அவர் மீது அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon