டெல்லியில் மேலும் 12 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கொரோனா..!
டெல்லியில் ஒரே பெட்டாலியனைச் சேர்ந்த மேலும் 12 செய்யாறு சிஆர்பிஎஃப் வீரர்கள் கொரொனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கிழக்கி டெல்லியிலுள்ள மயூர் விஹார் பகுதியில் முகாமிட்டிருக்கும் 31 ஆவது பெட்டாலியன் பிரிவை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 52 பேருக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் 12 வீரர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரொனா பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் 31 ஆவது பெட்டாலியன் பிரிவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்கு தொற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நோய் தொற்று ஏற்பட்ட வீரர்களில் அசாமை சேர்ந்த ஒருவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.







