--- --:--:-- --

கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய அரிமா சங்கம் !!

IMG-20200502-WA0139

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிர் பலிகளை வாங்கி வருகிறது.மத்திய, மாநில அரசுகள் சார்பாக இந்நோயை கட்டுபடுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

 

இந்நிலையில் கொரோனா நோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்பாட்டுக்கென கோவை அரசு மருத்துவமனைக்கு மாவட்ட அரிமா சங்கம் 324 B1 சார்பாக பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சஜீடேவிட், மண்டலத் தலைவர்கள் காளியப்பன்,ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பயன்படுத்தப்படும் கவச உடைகள்,முக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி திரவம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாசிடம் இன்று வழங்கினர்.

 

இதில் நேரு நகர் அரிமா சங்க செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon