நாடு முழுவதும் அக்டோபர் மாதம் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடும்..!
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடும் எனவும் குழந்தைகளுக்கு கொரொனா பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் நிபுணர்குழு பிரதமருக்கும் வழங்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரொனா 2-ஆவது அலை நாடு முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைத்து இருந்தது. இந்த குழு பிரதமர் மோடிக்கு மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளது.
அதனால் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் எனவும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் போன்ற அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.







