தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 69 பேர் உயிரிழப்பு …சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைவு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 69 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3965 ஆக பதிவாகி மொத்த பாதிப்பு 1,34,226 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றும் பாதிப்பு தொடர்ந்து குறைந்து 1,185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 3,591ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கையும் 85,915 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் ஒரே நாளில் 69 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இதுவரை பலி எண்ணிக்கை 1,898ஆக உயர்ந்து உள்ளது எனவும் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 346 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை 277, செங்கல்பட்டு 237, தூத்துக்குடி 175, சேலம் 136, தேனி 119, குமரி 133, திருச்சி 128, கள்ளக்குறிச்சி 102, கோவை 71, ஈரோடு 42 என மாவட்டங்களில் இன்று அதிகபட்சமாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






