தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் : 1410 பேருக்கு தொற்று உறுதி…!1456 பேர் டிஸ்சார்ஜ்..! 9 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1410 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில்,1456 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 2-வது நாளாக இன்றும் உயிரிழப்பு ஒற்றை இலக்கத்தில் 9 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1410 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 81ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று போல் இன்றும் ஒற்றை இலக்கத்தில் ஒரே நாளில் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதனால்
தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 6 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையிலும் தினசரி கொரோனா பாதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 3 85 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1456 ஆகும். இன்னும் சிகிச்சையில் இருப்போர் 10 ஆயிரத்து 997 பேர் மட்டுமே எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இன்று 64 ஆயிரத்து 705 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பரிசோதனை எண்ணிக்கை 1.20 கோடி எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.





