கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதால் மோசமான நரம்பு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி 5 கோடி இழப்பீடு கேட்ட நபர்..!
கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதால் மோசமான நரம்பு மற்றும் உளவியல் பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறி 5 கோடி இழப்பீடு கேட்ட சென்னை நபர் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு தொடரப்படும் என்று சீரம் இந்தியா தெரிவித்துள்ளது. சென்னை நபரின் குற்றச்சாட்டுகள் தவறானது தீங்கு விளைவிப்பதுமாகும் என்று சீரம் இந்தியா கூறியுள்ளது.
தடுப்பூசி சோதனைக்கு ஆட்படும் நபர் அதன் விளைவுகளை தானே ஏற்க வேண்டும் என்று அந்த நபருக்கு மருத்துவ குழுவினர் முன்னரே அறிவித்து விட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டு கூறப்பட்டதாகவும் சீரம் இந்தியா கூறுகிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகாவின் தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கும் சீரம் இந்தியா அதற்கான கிளினிக்கல் பணிகள் சோதனைகளை நாடு முழுவதும் நடத்துகிறது.






